Print this page

"குடி அரசை” ஒழிக்க பண வசூலாம். குடி அரசு - செய்திக் குறிப்பு - 16.07.1933 

Rate this item
(0 votes)

"குடி அரசை” எதிர்த்துப் போராட கத்தோலிக்கர்கள் நிதி என்ற பெரிய தலைப்பின் கீழ் “கத்தோலிக் லீடர்” என்ற ஆங்கில பத்திரிகையில் ஒரு முறை யீடு காணப்படுகிறது. 

கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரிகள் சு.ம. இயக்கத்தின் மீதும், 'குடி அரசின்' மீகும். ஆத்திரங்கொண்டு, அவைகளை அழிப்பது என்கிற முடிவு கொண்டு நிதி வசூல் செய்து வருகிறார்கள். அவர்களின் வேண்டுகோளின் பிரகாரமே இது வரையிலும் ரூ.250க்கு மேல் பணம் சேர்த்திருப்பதாகவும் நமக்குத் தெரிய வருகிறது. சபாஷ்! கத்தோலிக்கர்களே!! மெச்சினோம் புத்திசாலித்தனத்தை! 

குடி அரசு - செய்திக் குறிப்பு - 16.07.1933

 
Read 77 times